யாழ் தேர்தல் களத்தில் பெருவெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதனுக்கு யாழ் நகரில் சிறப்பான வரவேற்பு..!!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அங்கஜன் இராமநாதனின் வரவேற்பு நிகழ்வு இன்று யாழில் நடைபெற்றது.

யாழிலுள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ் மாவட்ட இளைஞரணியின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.இதன்போது வெடி கொழுத்தி மலர்மாலைகள் அணிவுக்கப்பட்டு பொன்னாடைகள் போர்த்தி அங்கஜனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.