வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை..!! மாவட்டச் செயலகத்திற்கு வருவதை உடன் நிறுத்துங்கள்..!

யாழ்.மாவட்டதில் தங்கியிருக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த மா வட்டங்களுக்கு திரும்பி அனுப்புவதற்கு உயர்மட்ட அனுமதி கிடைக்கவில்லை என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே சொந்த மாவட்டங்களுக்கு அனுப்ப முடியும். எனவே மாவட்டச் செயலகத்திற்கு வருவதை நிறுத்தி வீடுகளில் இருங்கள். எனவும் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் காரணமாக வேறு மாவட்டங்க ளிலிருந்து வருகை தந்து தற்பொழுது தமது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாது யாழ்ப்பாண மாவட்டத்தில் வசித்து வருபவர்கள்தாங்கள் வசித்து வரும் கிராம சேவையாளர் மற்றும் அந்தப் பிரிவு பிரதேச செயலரிடம் பதிவினை மேற்கொள்ளவேண்டும். வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான அனுமதி தேசிய மட்டத்தில் வழங்கப்பட்டதன் பின்னர் பதிவு செய்தவர்களைஅவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு ஒவ்வொரு நாளும் வெளி மாவட்டத்திற்கு செல்வதற்கான அனுமதி கோரி பெருமளவில் மக்கள் வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.