பெண்களே….உங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் உலகில் நீங்கள் தான் மிகவும் அதிஷ்டசாலிகளாம்.!!

மச்சம் உடம்பில் இருந்தால் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள்.மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் ஏற்படும் கருப்பு நிறப் புள்ளியே மச்சம் ஆகும். இத்தகைய மச்சம் சிலருக்கு நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும்.மச்சம் குறித்த ஆய்வை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது. அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கிறது என்றும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும், மேலும் தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே, மச்சம் அதிகமாக இருந்தால் அவர்கள் அதிர்ஷ்ட சாலிதான்.இதேவேளை, ஜோதிடத்தின் படி ஒவ்வொரு மச்சமும் ஒரு அறிகுறியை குறிப்பதாக நம்ப படுகிறது. அந்த வகையில் சில மச்ச ரகசியங்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

மீன் சின்னம்:இது உங்கள் உடலில் இருந்தால் உங்கள் வாழ்க்கை கௌரவம் மிக்கதாக இருக்கும். மீன் என்பது விஷ்ணுவின் மறுபிறவி என்று கூறப்படுகிறது.வில் மற்றும் அம்பு:உங்கள் உடலில் வில் மற்றும் அம்பு போன்ற அடையாளங்கள் இருத்தல் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திப்பீர்கள். ஆனால் இறுதியில் வெற்றி உங்களுடையதாய் இருக்கும். எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் நீங்கள் நினைத்ததை அடைந்தே தீருவீர்கள்.முக்கோணம்:உங்கள் உடலில் முக்கோண சின்னம் இருந்தால் உங்கள் வாழ்க்கை சுவாரசியங்கள் நிறைந்தகாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பல வித்தியாசமான அனுபவங்களை பெறுவீர்கள். செல்வத்திற்கு எந்த குறையும் இல்லாமல் வாழ்வீர்கள். மேலும் இந்த சின்னம் இருப்பவர்கள் அனைவரையும் வசீகரிப்பவராகவும், அனைவருக்கும் பிடித்தவராகவும் இருப்பார்கள்.

தலையில் மச்சம்:தலையில் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்களிடம் பேராசை மற்றும் பொறாமை குணம் நிறைய இருக்கும்.மேலும் அந்த பெண்களின் வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் மன நிறைவு இருக்காது என்று ஜோதிடப் பலன்களில் கூறுகின்றனர்.நெற்றியில் மச்சம்:நெற்றியின் நடுவில் மச்சம் அல்லது இரு புருவத்துக்கு இடையே மச்சம் இருந்தால், அவள் அதிகாரமிக்க பதவியில் அமர்வாள். அவள் செய்யும் செயல்களில் வெற்றி கிடைத்து, ஆடம்பர வாழ்வு கிடைக்கும்.மேலும், நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும், நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம்:காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும்.சந்தோசமான வாழ்க்கை இருக்கும். இதுவே வலதுபக்கம் இருந்தால், வறுமைகள் வாட்டும்.இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணம் கொண்டவளாக இருப்பார்கள்.வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவார்கள் என்றும் அர்த்தமாகும்.கண்களில் மச்சம்:பெண்களின் கண்களில் மச்சம் இருந்தால், அவ்ர்களின் வாழ்க்கை ஏற்றம் மற்றும் இறக்கம் குணங்கள் நிறைந்ததாக இருக்கும்.மூக்கில் மச்சம்:பெண்களின் மூக்கில் மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம் ஆகும். இதனால் நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு மற்றும் சமூக மதிப்புகள் கிடைக்கும்.காதுகளில் மச்சம்:பெண்களின் காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள்.மேலும், எவ்வளவு செலவுகள் செய்தாலும் அதற்குத் வருமானமும், பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு உடையவர்களாக இருப்பார்கள்.நாக்கில் மச்சம்:நாக்கில் மச்சம் இருந்தால், அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் மச்சம்:கழுத்தில் மச்சம் இருந்தால், அவர்களின் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடங்கள் கிடைக்கும்.மார்பில் மச்சம்:பெண்களின் வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள்.பெண்களின் இடது பக்க மார்பில் மச்சம் இருந்தால், உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம்நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால், அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.வயிற்றில் மச்சம்:பெண்களின் தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை கிடைக்கும்.தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம்:கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலாக இருப்பார்கள். மேலும் அவர்களின் வாழ்க்கை வசதியாகவும் இருக்கும்.கைகளில் மச்சம்:உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலைரசனை உடைய பெண் மற்றும் சிறந்த நிர்வாகியாக விளங்குவார்கள்.தொடையில் மச்சம்:இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷ்டப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள்.வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காத குணமும் இருக்கும்.இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பார்கள் என்று ஜோதிட பலன்கள் கூறுகின்றது.