கடற்கரை அதிஷ்ட சீட்டு விற்பனை நிலையத்தில் அதிஷ்டலாபச் சீட்டுகளை வாங்கிய நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!!

ஒரே நேரத்தில் 25 அதிஷ்டலாபச் சீட்டுகளை வாங்கிய நபரே எதிர்பாராத வகையில் இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;அமெரிக்காவில் உள்ள வேர்ஜீனியாவை சேர்ந்தவர் ரேமண்ட் ஹாரிங்டன். கடந்த ஜூலை மாதம் அங்குள்ள கடற்கரை பகுதியில் அமைந்துள்ள லொட்டரி கடைக்குச் சென்ற அவர் ஒரே குலுக்கலுக்கான இருபத்தைந்து அதிஷ்ட லாபச் சீட்டுகளை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய ஒவ்வொரு அதிஷ்டச் சீட்டும் ஒரு அமெரிக்க டொலருக்கு வாங்கப்பட்டவை.அந்த குலுக்கலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது ஹாரிங்டன் மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அனைவரும் ஆச்சரிய அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.அதற்கான காரணம் ஹாரிங்டன் வாங்கிய 25 சீட்டுக்கும் பரிசு வீழ்ந்துள்ளது. ஒரு சீட்டிற்கு 5000 அமெரிக்க டொலர் வீதம் மொத்தமாக 125000 அமெரிக்க டொலர்களை வென்றிருந்தார் அவர்.

ஏனோ தெரியவில்லை 25 சீட்டுகளை வாங்க வேண்டுமென முடிவெடுத்தேன். ஒரு விளையாட்டு முயற்சியாகத் தான் இதை செய்தேன்.ஆனால், இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. இதில் கிடைத்த பணத்தை எனது பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக பயன்படுத்த உள்ளேன்’எனவும் தெரிவித்துள்ளார் அதிர்ஷ்டசாலியான ஹாரிங்டன்.