இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பில் வெளியான முக்கிய தகவல்..!

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 23 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.இதற்கமைய, நாட்டில் இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத் 564 ஆக அதிகரித்துள்ளது.2 ஆயிரத்து 839 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 264 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.