நடுக்கடலில் கடற்படையினர் அதிரடி…3270 மில்லியன் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு..!!

இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் பெருந்தொகை போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.தென்பகுதி கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகொன்றை கடற்படையினர் சோதனையிட்ட போது, இவ்வாறு பெருந்தொகை மதிப்புடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதன் போது 26 கிலோ நிறையுடைய ஹெரோயின் மற்றும் 56 கிலோ நிறையுடைய ஐஸ் வகை போதைப் பொருட்களை குறித்த படகில் இருந்து இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.கடற்படையினரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து ஆழ்கடலில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 3,270 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.தெற்கு கடல் பகுதியில் இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.260 கிலோகிராம் ஹெரோயின், 56 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.