சாவகச்சேரியில் அமரர் ரவிராஜ் அவர்களின் சிலைக்கு கறுப்புக் கொடி..!!

மறைந்த முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உருவச்சிலை கை,கால்கள் கட்டப்பட்டுள்ளது. முகம் கறுப்பு துணி கொண்டு மூடப்பட்டுள்ளது.இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரவிராஜ் சசிகலா சூழ்ச்சியான முறையில் சுமந்திரனால் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மாமனிதர் ரவிராஜின் சிலைக்கு கறுப்புக்கொடி போர்த்தப்பட்டுள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் சிலை சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாமனிதர் என்ற வாசகம் பொறிக்கப்படாமல், திறக்கப்பட்டது.மாமனிதர் ரவிராஜின் மனைவி, சசிகலா இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிட்டார்.விருப்பு வாக்கின் அடிப்படையில் அவர் 4வது இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுகட்சியின் இன்னொரு வேட்பாளர் தொடர்பில் சசிகலா தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.இந்த நிலையில், இன்று சாவகச்சேரியிலுள்ள ரவிராஜின் சிலைக்கு பெண்கள் சிலரால் கறுப்பு கொடி போர்த்தப்பட்டது.