அவசரமாக கூடிய ஐக்கிய தேசியக் கட்சி..! தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகத் தயாராகும் பிரபலங்கள்..!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபலங்கள் பலர் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாரிய தோல்வியை பெற்றுக் கொடுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகிய போதே பிரபலங்களுக்கு இடையில் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்று தோல்வியை சந்தித்துள்ள நிலையில் ஒரே ஒரு ஆசனத்தை மாத்திரம் கைப்பற்றியது.ஐக்கிய தேசிய கட்சியை பின்தள்ளி தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி முன்னிலையில் உள்ளது.இலங்கையில் பாரம்பரிய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி படுமோசமான தோல்வியை தழுவிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தோல்வி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.