தந்தையின் கோட்டையில் சாதனை படைத்த தனயன்..!!

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.மஹிந்தவின் கோட்டை எனப்படும் ஹம்பாந்தோட்டையில் நாமல் ராஜபக்ஸ மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார். பொதுத் தேர்தல் 2020 இன் ஹம்பாந்தோட்டை மாவட்ட விருப்பத்தேர்வுக்கான முடிவுகள் தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக வாக்குகளைப் பெற்றது, இது 280,881 (75.10%) ஆகும். இதன் மூலம் 06 இடங்களைப் பெற்றது.

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 5 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு-

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன:நாமல் ராஜபக்ஷ – 166,660,டி.வி.ஷானக்க – 128,805மஹிந்த அமரவீர – 123,730, சமல் ராஜபக்ஷ – 85,330, உபுல் கலப்பத்தி – 63,369, அஜித் ராஜபக்ஷ – 47,375,

ஐக்கிய மக்கள் சக்தி:திலிப் வெதாராச்சி – 25,376