பொதுத் தேர்தல் யாழ் மாவட்டம்…ஒரே பார்வையில் தெரிவான எம்.பிக்களும் விருப்பு வாக்கு விபரங்களும்..

யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தெரிவாகினர். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அங்கஜன் இராமநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.டி.பியின் சார்பில் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவாகினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிய, சி.சிறிதரன்- 35,884, எம்.ஏ.சுமந்திரன்- 27,834, த.சித்தார்த்தன்- 23,840, சசிகலா- 23,098, மாவை சேனாதிராசா- 20,292, ஈ.சரவணபவன்- 20,358, பா.கஜதீபன்- 19,058,இ.ஆனல்ட்- 15,386, கு.சுரேந்திரன்- 10,917, வே.தவேந்திரன்- 5,952 வாக்குகளை பெற்றனர். இவர்களை விட மாற்றுக் கட்சி வேட்பாளர்களான;

அங்கஜன் இராமநாதன்- 36,356, டக்ளஸ் தேவானந்தா- 32,146, கஜேந்திரகுமார்- 31,658 திரு .க.வி.விக்னேஸ்வரன்- 21,554 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.