கொரோனாவினால் உலகம் முழுவதும் மனிதப் பேரழிவு… ஒரு இலட்சத்தையும் கடந்தது உயிரிழப்புகள்..!!

உலகம் முழுவதும் மிக மோசமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.
தற்போதைய இறுதித் தகவல் படி மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 371 ஆகக் அதிகரித்துள்ளது.அத்துடன், 16 இலட்சத்து 52 ஆயிரத்து 643 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 69ஆயிரத்து 927ஆகப் பதிவாகியுள்ளது.தற்போது கிடைத்துள்ள தகவல் படி, அமெரிக்காவில் இன்று இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 236 பேரின் மரணம் பதிவாகியுள்ளது.மேலும், ஸ்பெயினில் 523 பேரினதும், இத்தாலியில் 570 பேரினதும் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் பிரித்தானியாவில் என்றுமில்லாதவாறு 980 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், பெல்ஜியத்தில் ஆகக் கூடிய மரணங்களாக இன்று மட்டும் 486 பேர் மரணித்துள்ளனர்.இன்றைய நாளின் முழுமையான தரவுகள் இன்னும் கிடைக்காத நிலையில், இதுவரையான நேரத்தில் 4 ஆயிரத்து 697 பேர் மொத்தமான மரணித்துள்ளதுடன் வைரஸ் பரவலின் வீரியம் குறையாத நிலையில் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கின்றமை பெரும் அச்சத்தையே ஏற்படுத்திவருகின்றது.
இதே வேளை, கடந்த 24 மணிநேரத்தில் 554 பேர் மருத்துமனைகளிலும், 433 பேர் மூதாளர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. இதுவரை மொத்தமாக 13 197 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். (மருத்துமனைகளில் 8,598, மூதாளர் இல்லங்களில் 4,599)கடந்த 24 மணிநேரத்தில் 4,343 பேருக்கு வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 3 161 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிகுதி 1 182 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.தற்போது 7004 பேர் தீவிர சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை,34 வீதமானவர்கள் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், 98 பேர் 30வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை 90,676 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, தற்போது 32,267 பேர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.