கொழும்பில் பல தொகுதிகளில் சஜித் அபார வெற்றி! ரணில் படுதோல்வி.!!

பொதுத் தேர்தலுக்கான பெறுபேறுகள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன அபார வெற்றியை பெற்றுள்ளது.எனினும், ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையான கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றி பெற்றுள்ளது.கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி, கொழும்வு வடக்கு, பொரளை, தெஹிவளை ஆகிய தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுனவை விட அதிக வாக்கு வித்தியாத்தில் வெற்றி ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள கூடிய வாக்கினை பெறவில்லை எனத் தெரிய வருகிறது. இதன்மூலம் 23 வருட ரணிலின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.