தாமரை மொட்டின் அமோக வெற்றியை வண்ணமயமாகக் கொண்டாடும் தாமரைக் கோபுரம்..!!

வெளியாகி வரும் பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு அமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை விட அதிகமான ஆசனங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்து வருகின்றமை தற்போது வெளியான பெறுபேறுகளுக்கமைய உறுதியாகி உள்ளது.

இதுவரை வெளியான முடிவுகளின் படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியானது முன்னிலை வகிக்கின்றது.இதுவரை வெளியாக பெறுபேறுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 3503575 வாக்குகளை பெற்றுள்ளது.இதனைக் கொண்டாடும் முகமாக கொழும்பு தாமரைக் கோபுரத்தில் விளக்குகள் பல நிறங்களில் ஒளிரவிடப்பட்டு, மொட்டுக்கட்சியின் வெற்றியை கொண்டாடி வருகின்றது.இதனையடுத்த அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் அவரின் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாடங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.