மட்டக்களப்பில் வெற்றிவாகை சூடியது கூட்டமைப்பு..!! பெரமுன, பிள்ளையானுக்கும் வெற்றி முகம்..!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 ஆசனங்களையே பெற்றுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மு.காங்கிரஸ், பொதுஜன பெரமுன ஆகிய தரப்பினர் தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளனர். இலங்கை தமிழ் அரசு கட்சி பெற்ற வாக்குகள் 79,460 வாக்குகள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 67,692, முஸ்லிம் காங்கிரஸ் 34,428, பொதுஜன பெரமுன 33,420 வாக்குகளை பெற்றுள்ளனர்.ஹிஸ்புல்லா தரப்பு 31,054, தேசிய மக்கள் சக்தி 28,362 ஆசனங்களை பெற்றனர். ஆசனம் பெற முடியவில்லை.

தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரா.சாணக்கியன், கோவிந்தம் கருணாகரன், பெரமுன சார்பில் வியாழேந்திரன், மு.கா சார்பில் நசீர் அஹமட் ஆகியோர் தெரிவாகியுள்ளதாக உத்தியோகபற்றற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.