மஹிந்தவின் அபார வெற்றி! அரச திணைக்களங்களில் வெற்றிக் கொண்டாட்டம்..!!

நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் பெறுபேறுகள் தற்சமயம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளதாக, தற்போது வெளியான பெறுபேறுகளுக்கு உறுதியாகி உள்ளது.இதனையடுத்த அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் அவரின் ஆதரவாளர்கள் வெற்றிக்கொண்டாடங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை வெளியாக பெறுபேறுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 27 இலட்சத்த 25 ஆயிரத்து 197 வாக்குகளை பெற்றுள்ளது.

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 9 இலட்சத்து 46 ஆயிரத்து 924 வாக்குகளை பெற்றுள்ளது.அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 1 இலட்சத்து 88 ஆயிரத்து 028 வாக்குகளை பெற்றுள்ளது.இலங்கை தமிழரசு கட்சி 1 இலட்சத்து 47 ஆயிரத்து 991 வாக்குகளை பெற்றுள்ளது.இதேவேளை பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளதாக தெரியவருகிறது.