மன்னாரிலும் முன்னிலை வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..!! வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு.!!

நாடாளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்கின் படி இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிலை வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும்,தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான சி.ஏ.மோன்றாஸ் உத்தியோகபூர்வமாக இதனை வெளியிட்டுள்ளார்.மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள விசேட வாக்கு எண்ணும் நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கும் போது;

இன்று வியாழக்கிழமை காலை 7 மணிமுதல் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள விசேட வாக்கு எண்ணும் நிலையத்தில் வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.மொத்தமாக 15 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அரம்பிக்கப்பட்டது. முதலில் வாக்கு பெட்டிகளுக்கான வாக்கு எண்ணலும்,பின்னர் கட்சிகளுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.மாலை 3 மணியளவில் கட்சிகளுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெற்றது. மொத்தமாக 62 ஆயிரத்து 675 வாக்குகளில் 4 ஆயிரத்து 24 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.மிகுதி 58 ஆயிரத்து 652 வாக்குகளில் இலங்கை தமிழரசுக் கட்சி 20 ஆயிரத்து 266 வாக்ககளும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 14 ஆயிரத்து 632 வாக்குகளையும்,சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 12 ஆயிரத்து 50 வாக்குகளையும்,சுயேட்சைக்குழு-01, 2 ஆயிரத்து 565 வாக்குகளையும்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1288 வாக்குகளையும்,சமூக மக்கள் ஜனநாயக கட்சி 1304 வாக்குகளும்,ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 2 ஆயிரத்து 86 வாக்குகளும்,ஏனையவை குறைந்தவையாக உள்ளது.

வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு தெரிவுகள் இடம்பெற்று வருகின்றது.பின்னர் மாவட்ட ரீதியாக வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும்.குறித்த வாக்கு விபரங்கள் வன்னி தேர்தல் மாவட்டமான வவுனியாவிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.