இதோ மற்றுமொரு தேர்தல் முடிவு…. முல்லைத்தீவு மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதி…

வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் பிரிவில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றியீட்டியுள்ளது.குறித்த தேர்தல் பிரிவில் 22,492 வாக்குகளைப் பெற்று 44.16 என்ற சதவீதத்துடன் அக்கட்சி முன்னிலைப் பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 8,307 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி 6,087 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளது.ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி 3,694 வாக்குளைப் பெற்று நான்காம் இடத்தைப் பெற்றுள்ளதோடு, அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் 2,472 வாக்குளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.