நாடாளுமன்றத் தேர்தல் – யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்..!!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணம் மாவட்டம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சி 7634 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கின்றது.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணம் மாவட்டம் – ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 6369 வாக்குகளுடன் வகிக்கின்றது. மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்…