கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிப்பு..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 541 ஆக உயர்வடைந்துள்ளது.இதேவேளை நாட்டில் இதுவரை மெத்தமாக 2,839 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 287 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதோடு, கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 68 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.மேலும், இந்த தொற்று காரணமாக இதுவரையில் இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.