சீரற்ற காலநிலையினால் வாக்கு எண்ணும் பணியில் சிக்கலா?

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.மின்சார அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை பெய்த அடைமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது.இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக தேர்தல் அதிகாரிகள் வருகை தருவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக, வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை மின்சார சபை எடுத்துள்ளது.இந்நிலையில், தடையின்றி மின் விநியோகிப்பதற்கான அனைத்து பணிகளையும் இலங்கை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.