யாழில் பெரும் வாக்குச் சரிவை சந்தித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…!! ஏறுமுகம் கண்ட ஈ.பி.டி.பி…!!

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வாக்கு சரிவை சந்தித்துள்ளது.

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் 7634 வாக்கை பெற்றிருந்தது. எனினும், 2015ஆம் ஆண்டு தேர்தலில் 13,545 வாக்கை பெற்றிருந்தது. 5,911 வாக்கை யாழ் தொகுதியில் இழந்துள்ளது.2015 இல் ஈ.பி.டி.பி 2,203 வாக்கை பெற்றிருந்தது. தற்போது 5,545 வாக்கை பெற்றுள்ளது. 3,342 வாக்கை ஈ.பி.டி.பி அதிகரித்துள்ளது.2015 இல் தமிழ் காங்கிரஸ் 1,132 வாக்கை பெற்றிருந்தது. தற்போது 4642 வாக்கை பெற்றுள்ளது. 3.510 வாக்கை அதிகரித்துள்ளது.ஊர்காவற்துறையில் 2015இல் தமிழ் அரசு கட்சி 7,688 வாக்குகளை பெற்றது. ஈ.பி.டி.பி 3,924 வாக்குகளையும், தமிழ் காங்கிரஸ் 329 வாக்குகளை பெற்றது.தற்போது ஈ.பி.டி.பி 6369, தமிழ் அரசு கட்சி 4412, தமிழ் காங்கிரஸ் கட்சி 1876 வாக்கை பெற்றன.ஈ.பி.டி.பி 2445 வாக்கை அதிகரித்தது. தமிழ் அரசு கட்சி 3276 வாக்கை இழந்தது. தமிழ்காங்கிரஸ் 1547 வாக்கை அதிகரித்தது.