தேர்தல் நாளில் கொழும்பின் இரு வேறு இடங்களில் சடலமாக மீட்கப்பட்ட இரு நபர்கள்..!!

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் பேலியகொடை – களனி கங்கையின் கறுப்பு பாலத்திற்கு கீழ் அடையாளம் தெரியாத இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஆண்கள் எனவும் இவர்களை அடையாளம் காண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு கோட்டை மற்றும் பேலியகொடை பொலிஸார் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.