140,000ற்க்கும் அதிகமான பொதுமக்களின் உயிர்களை ஒரே நேரத்தில் காவு கொண்ட ஹிரோஷிமா தாக்குதலின் 75 ஆவது ஆண்டு நாள் இன்று!!

140,000ற்க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட ஹிரோஷிமா தாக்குதலின் 75 ஆவது ஆண்டு நினைவு நாளில் சுயநல தேசியவாதத்தை நிராகரிக்குமாறு ஹிரோஷிமா மேயர் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் முதல் அணு குண்டுவெடிப்பின் 75 ஆவது ஆண்டு நிறைவேந்தல் நிகழ்வானது இன்று ஜப்பான், ஹிரோஷிமாவில் அனுஷ்டிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதன் நிகழ்வுகள் இந்த ஆண்டு பெருமளவு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அஷ்டிக்கப்பட்டது.இதன்போது ஹிரோஷிமா நகரத்தின் மேயர் நாடுகளை சுயநல தேசியவாதத்தை நிராகரிக்கவும், அணு ஆயுதக் குறைப்பில் இன்னும் தீவிரமாக கவனம் செலுத்துமாறும் அனைத்து நாடுகளிடமும் வேண்டிக் கொண்டார்.1945 ஆகஸ்ட் இதே நாளில்தான் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா.லிட்டில் பாய்” என்று செல்லப்பெயர் கொண்ட இந்த அணுகுண்டு வீச்சினால் 1,18,661 பொது மக்கள் கொல்லப்பட்டதாக அந்த நேரத்தில் ஜப்பான் அறிவித்தது.எனினும், ஹிரோஷிமாவில் வசித்த 3,50,000 பேரில் 1,40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என பிந்தைய மதிப்பீடுகள் தெரிவித்தன. இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலர் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர்.