வாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி..!!

பொதுத் தேர்தல் வாக்களிப்பின்போது, புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் 2020 பொதுத் தேர்தல் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சீட்டுகளை கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.நாவலப்பிட்டிய மத்திய கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியிலேயே குறித்த இளைஞன், கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாவலப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.