வரலாற்று ஏடுகளில் பதிவாகப் போகும் ராஜபக்ஷர்களின் வெற்றி! பஸில் ராஜபக்ஸ தெரிவிக்கும் விடயம்..!!

ஒரு அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள், நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றும் முதலாவது தேர்தலாக நேற்றைய தேர்தல் வரலாற்று ஏடுகளில் பதியப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள்கருத்துக்களை மதிக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட்ட கட்சியாகும். ஆட்சி அமைக்கப்பட்ட பின்னரும் அந்தக் கட்சி மக்களின் தேவைக்காக குரல் கொடுக்கும் என பசில் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.கொரோனா நெருக்கடியை சமாளித்த விதத்தைப் போன்றே, நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கும் புதியஅரசாங்கத்தின் மூலம் தீர்வு காணப்படும்.கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட ஆட்சி நிர்வாகத்தின் கீழ் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீண்டெழச் செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை எதிர்பார்த்துள்ளோம். இலக்கு வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளை அணுசரித்து தேர்தலை மிகவும் சிறப்பாக நடத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலதரப்புகளுக்கும் மக்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ மகா வித்தியாலத்தில் நேற்று வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இந்தத் தகவல்களை பசில் வெளியிட்டார்.