நாடளாவிய ரீதியில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்..!

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலிற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரையில் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் தற்போது வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகிறது. வவுனியா:வவுனியாவில் 141 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நேற்று மாலை வாக்கெண்ணும் நிலையங்களிற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகளுக்காக வவுனியா மாவட்ட செயலகத்தில் 18 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான தபால் வாக்குகளை எண்ணுவதற்காக காமினி தேசிய பாடசாலையில் 13 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இச்செயற்பாடுகளில் 2000 இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.