வாக்களிப்பு பரபரப்பிற்கு மத்தியில் யாழில் கள்ளவாக்கு! இன்னும் சில மணித்தியாலங்களில் தேர்தல் முடிவுகள்..

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2020 இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்றைய தினம் காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரையில் பரபரப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதுடன்வாக்குகளை எண்ணும் பணிகளும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளன.எனவே இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் எந்த நேரத்திலும் தேர்தல் முடிவுகள் வெளியாகலாம் என்ற சூழ்நிலை காணப்படும் நிலையில் அதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.