வாக்குச்சாவடிகளுக்குள் பிரவேசித்தாரா பிரதமர் மஹிந்த.? மூன்று வாக்குச்சாவடிகளில் மறுவாக்கெடுப்பு கோரும் ஐக்கிய மக்கள் சக்தி..!!

குருநாகல் நிக்கவரெட்டிய பகுதியில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளிலும் கோபேனெக வாக்குச் சாவடியிலும் மீள்வாக்குப் பதிவை நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்தக் கோரிக்கையை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ளார்.பிரதமரும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ச குறித்த மூன்று வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவுகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கு சுமார் 100 ஆதரவாளர்களுடன் பிரவேசித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சுதந்திரமான தேர்தல் ஒன்றுக்கான வாய்ப்பை வழங்காது என்றும் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.எனவே குறித்த மூன்று வாக்குச் சாவடிகளிலும் மீள்வாக்குப் பதிவுகளை நடத்த வேண்டும் என்று அவர் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரை கேட்டுள்ளார்.இதேவேளை மஹிந்த ராஜபக்ச அனுமதியில்லாமல் தமது பெரும்பாலான ஆதரவாளர்களுடன் நிக்கரவெட்டிய தொகுதிக்கு சென்றமையை தேர்தல் வன்முறைகளுக்கான கண்காணிப்பு மையமான சீஎம்ஈவி உறுதி செய்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.இதன்போது பிரதமர் மஹான் தேசிய பாடசாலையின் இரண்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றதாக அந்த கண்காணிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.

நிகவரெட்டியவில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளிலும் கொபெய்கனை உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும் மறுவாக்கெடுப்பு நடத்துமற்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.குறித்த மூன்று வாக்குசாவடிகளுக்கும் பிரதமரும் ஸ்ரீலனாக பொதுஜன பெரமுனாவின் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவாளர்களுடன் நுழைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக பொதுத் தேர்தல்கள் வாக்குப்பதிவின் போது மஹிந்த ராஜபக்ஷ 100 வாக்காளர்களுடன் மூன்று வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.எனவே இந்த சம்பவம் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை அப்பட்டமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.அத்தகைய வேட்பாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவ்வாறு செய்யத் தவறினால், அந்த வாக்குச் சாவடிகளில் மறுவாக்கெடுப்பை நடத்த நாளை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.