இரண்டே இரண்டு வாக்காளர்களுக்காக இலங்கையில் ஒரு வாக்கெடுப்பு நிலையம்..!! பத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடமையில்..!!

2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பில் இருவர் வாக்குகளை பதிவுசெய்யும் வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டு வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவர் வாக்களிக்கும் நிலையமாக கருதப்படும் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலைக்கு இன்று (புதன்கிழமை) காலை வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன.

மட்டக்களப்பில் இருந்து படகு மூலம் குறித்த வாக்குப்பெட்டிகளும் வாக்குச்சீட்டுகளும் கொண்டுசெல்லப்பட்டன. இரண்டு வாக்காளர்களாக உள்ள தொழு நோயாளர்கள் வாக்களிப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பொலிஸாரும் அங்கு சென்று கடமையினை பூர்த்திசெய்தமை குறிப்பிடத்தக்கது.