மண வாழ்க்கை என்றும் தித்திக்க மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்..!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

ஒரு மனிதனின் மணவாழ்க்கை வெற்றி பெற்றுவிட்டால் அவன் வாழ்க்கையிலும் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுகிறான். அதேநேரத்தில் மணவாழ்க்கை ருசிக்காவிட்டால் தன் வாழ்வில் அனைத்து நேரங்களையும் சண்டை, சச்சரவு என அதற்குள்ளாகவே போட்டு முடக்கி சோர்ந்துபோய் விடுகிறார்கள்.

எல்லாம் சரி.மணவாழ்க்கை இனிக்க என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா? இந்த மூன்றை மட்டும் உங்க மனைவிகளுக்கு செய்துபாருங்கள். உங்கள் மணவாழ்க்கையும் இனிக்கும்.சரி வாருங்கள் அது எதெல்லாம் எனப் பார்க்கலாம்.ஆணின் அன்புக்கு முன்பு பெண்கள் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுகிறார்கள். ஆகையால் ரொம்பவே அன்பைப் பொழியுங்கள். தனக்கு எல்லாவிசயத்திலும் கணவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பெண் விரும்புவார். ஆகவே அப்படி, முக்கியத்துவம் கொடுங்கள்.மனைவிக்கு லேசாக உடல் சோர்வுற்று இருப்பது தெரிந்தாலே அய்யோ..செல்லத்துக்கு என்னாச்சுன்னு அன்பாக நான்குவார்த்தை பேசுங்கள். அவர்களின் சிறு முயற்சியைக் கூட பெரிதாக கொண்டாடுங்கள். ஓ..சூப்ப்ர்ன்னு சொல்லுங்க.பிறந்தவீட்டுக்கு பின்பு கணவனே கதி என உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கும் ஜீவனை அழவைக்கவே கூடாது என உறுதிபூணுங்கள். உங்கள் அவள் செய்யும் சாப்பாடு ரொம்ப சுமாராவே இருந்தாலும் தயங்காம சூப்பர்ன்னு சொல்லுங்க. அவுங்களை அப்பப்போ சிரிக்கவையுங்கள்.. இதையெல்லாம் வழக்கம் போல தொடருங்கள்.. உங்க வாழ்க்கையும் இனிக்கும்.