சாவகச்சேரியில் பதிவானது கள்ளவாக்கு.!! வாக்களிப்பு நிலையத்தில் பதற்றம்..!!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன், சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றிருக்கின்றார்.இதன்போது அங்கு, அவர் ஏற்கனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.இதனால் இவ்விடயம் தொடர்பாக தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால், விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், பாரிய வாக்கு மோசடிகள் பரவலாக இடம்பெற்றுள்ளதா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.