வைத்தியத்துறை ஊழியர்கள் அனைவரும் சேவை அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி.!!

சுதேச மருத்துவ சேவை உள்ளிட்ட மருத்துவ சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களும், தமது சேவைக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பொலிஸ் மாஅதிபரினால், மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த வகையில், குறித்த சேவை அடையாள அட்டையுடன், தமது நிறுவன உயரதிகாரியின் கடிதம், இத்துறைகளில் உள்ளவர்களுக்கு அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணிகளில், சுதேச மற்றும் மேற்கத்தேய மருத்துவத் துறையில் உள்ள அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழியர்களுக்கும் இவ்வாறு அனுமதி வழங்கப்படுவதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.