தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பெறும் மிகச்சிறந்த 5 நன்மைகள் இவைதான்..அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

உலக தாய்ப்பால் வார தினத்தின் தொடக்க நாளான இன்று தாய்ப்பால் குடிக்கும் குழந்தை பெறும் மிகச்சிறந்த நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.இந்த வருடம் ஆரோக்கியமான உலகை உருவாக்க தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பிரசவித்த பெண்களும், தாய்ப்பாலை மட்டுமே உணவாக பெறுவதன் மூலம் பிறந்த குழந்தையும் எண்ணற்ற நன்மைகளை பெறுகிறார்கள்.நோய் எதிர்ப்பு சக்தி பிறக்கும் போதே கொண்டிருக்கவில்லை என்றாலும், அத்தகைய சக்தியை கொடுப்பது தாய்ப்பால் தான்.அம்மாவுக்கும் குழந்தைக்கும் உண்டாகும் பல நன்மைகளில் குழந்தைகள் பெறும் அத்தியாவசியமான 5 நன்மைகள் குறித்து அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

​மிகச் சிறந்த முதன்மையான உணவு: குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாயின் மார்பகங்களில் சுரக்கும் பால் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது சீம்பால் (colostrum) என்று அழைக்கப்படுகிறது.இந்த 5 நிலைகளில் தான் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டணும், இளந்தாய்மார்களுக்கானது!குழந்தையை பிரசவித்ததும் பெறப்படும் முதல் பாலில் பலவிதமான ஊட்டச்சத்துகளும் ஆன்டி பாடிக் சத்துகளும் நிறைந்திருக்கிறது. போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காத நிலையே இது என்றாலும், பிறந்த குழந்தையின் வயிற்றுக்கு கால் டீஸ்பூன் அளவு போதுமானது என்பதால் அம்மா கவலையில்லாமல் இந்த சீம்பாலை மட்டுமெ கொடுக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் முதல் பாலான சீம்பாலை தவிர்க்க கூடாது. பால் சுரப்பு சீராக இருக்க இவை மிகவும் அவசியம்.​திடீர் இறப்பு நோய் தடுக்கப்படுகிறது:குழந்தை பிறந்த முதல் மூன்று காலங்களுக்கு பிறகே உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. அதுவரை குழந்தைக்கு வேண்டிய எதிர்ப்புசக்தியை தருவது தாய்ப்பால் மட்டுமே.வேறு எந்த இணை உணவும் பொருளும் கொண்டு குழந்தைக்கு எதிர்ப்புசக்தியை தரமுடியாது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு திடீர் இறப்பு நோய்க்குறியான (SIDS) வாய்ப்பு குறைகிறது.தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளை காட்டிலும் ஃபார்முலா பால் (தாய்ப்பால் இல்லாத சூழலில்) குடிக்கும் குழந்தைகள் வயிற்றுப்போக்கு பிரச்சனை சந்திப்பதை பார்க்கலாம். தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைக்கு ஒவ்வாமை உண்டாகாது என்பதோடு ஆஸ்துமா, நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகளையும் பெருமளவு தடுத்து விடுகிறது.​செரிமானம் சீராகிறது:பிறந்த குழந்தைக்கு ஜீரண மண்டல உறுப்புகள் வளர்ச்சி பெறும் வரை அவ்வபோது செரிமான பிரச்சனை உண்டாக கூடும். அதனால் தான் குழந்தைகள் அவ்வபோது தாய்ப்பாலை கக்குவதும் கூட.
ஆனால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு பெருமளவு இந்த செரிமானக்கோளாறுகள் உண்டாகாமல் தடுக்கப்படும். தாய்ப்பாலில் இருக்கும் பால் நொதிகள் குழந்தைக்கு செரிமானத்தை எளிதாக்குகிறது.அதனால், மலம் கழிப்பதிலும் பிரச்சனை உண்டாக்காது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலச்சிக்கல் பிரச்சனையை பெருமளவு சந்திப்பதில்லை.​முழுமையான ஊட்டச்சத்து:குழந்தைக்கான ஊட்டச்சத்து தாய்ப்பாலில் இருந்து தான் தொடங்குகிறது. அதனால் தான் பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை நீர் கூட கொடுக்காமல் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.தாய்ப்பாலில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், நீர், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சர்க்கரை போன்றவை சரியான அளவு இருப்பதோடு ஆரோக்கியமான வளர்ச்சியையும் குழந்தைக்கு உண்டாக்குகிறது.ஊட்டச்சத்தான உணவுகள் தாயிடமிருந்து பெறப்படும் தாய்ப்பாலில் இருக்கிறது என்பதால் அம்மா தன்னுடைய உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.​அபார மூளை வளர்ச்சி:குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலையும், அதன் பிறகும் மருத்துவரின் வழிகாட்டுதலோடு ஒன்றரை வருடங்கள் வரை இணை உணவோடு தாய்ப்பாலையும் கொடுத்துவந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்பது பல ஆய்வுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஐ.க்யூ சோதனைகளில் அறிவாற்றல் வளர்ச்சியில் சிறந்து விளங்குவது நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியிலும் மனதளவிலும் நல்ல வளர்ச்சியை பெற்று திறம்பட மிளிர்வார்கள்.பிரசவித்த ஒவ்வொரு பெண்ணும் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தருவதை உறுதி செய்வதன் மூலம் எதிர்காலத்தில் ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முடியும்.