நாடு முழுவதிலும் களைகட்டும் பொதுத் தேர்தல் வாக்களிப்பு.!! ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்களிக்கும் பொதுமக்கள்..!!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று புதன்கிழமை(05) காலை-07 மணியளவில் ஆரம்பமாகியது.தேர்தலின் வாக்கெடுப்பு மாலை-05 மணி வரை இடம்பெறவுள்ளது.

166 தொகுதிகளிலிருந்து 196 பேரை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்வதற்காக இன்றைய பாராளுமன்றப் பொதுத் தேர்தல் இடம்பெறுகிறது.யாழ்ப்பாணம், வன்னி உள்ளிட்ட தேர்தல் தொகுதிகளிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேவேளை, கொரோனாத் தாக்கம் காரணமாக இம்முறை வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.