ஹம்பாந்தோட்டையில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார் பிரதமர் மஹிந்த..!!

09 ஆவது நாடாளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதனால் அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது, வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை தேர்தலில் வாக்களித்த பின்னர் கருத்து பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, வாக்குச் சாவடிகள் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில், ஜனநாயக செயற்பாட்டில் அனைவரும் பங்கேற்பது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் இன்றைய ஜனநாயக தேர்தலில் நாம் அனைவரும் பங்கேற்பது மிக அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.