பொதுத் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் யாழ் மக்கள்..( படங்கள் இணைப்பு)

ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு பணிகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.யாழ். மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று காத்திருந்து தமது வாக்குகளை அளித்து வருகின்றனர்.பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி வாக்களித்து வருவதாகவும், வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார விதிமுறைகள், சமூக இடைவெளி பேணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.காலையிலேயே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று சமூக இடைவெளி யினை பேணி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிக்கின்றனர்

யாழ் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் எந்தவிதமான அச்சமும் இன்றி கட்டுப்பாடுகளுமின்றி மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது.

தெல்லிப்பளை:யாழ்.தெல்லிப்பளை பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் முகக்கவசமணிந்து சுகாதார நடைமுறைகளுக்கமைவாக வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக தெல்லிப்பளை, கொல்லன்கலட்டி சைவத்தமிழ் வித்தியாலயத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.இதேவேளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா யாழ். அமெரிக்க மிஷன் கல்லூரி வாக்குச்சாவடியில் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளார்.