தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார்!

நாளை நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு கடமைகளில் 69,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.பொதுத் தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த 10 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பொலிஸாருக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு படையினரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நடமாடும் சேவைகளில் 3,069 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த பாதுகாப்புக் கடமைகளில், பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 10,500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.