இலங்கையின் ஒரு பகுதி மக்களின் இரத்தத்தில் கலந்துள்ள ஈயம்..!! ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!

அனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டு பிரிவின் விசேட வைத்திய ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார். இந்த மக்களின் இரத்தத்தில் டெசி லீட்டர் ஒன்றிற்கு 3 – 9 மைக்ரோ கிராம் அளவு ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பகுதி மக்களுக்கு நரம்பியல் கோளாறுகள், சிறுநீரக செயற்பாட்டில் தடை ஏற்படுதல், அதிக இரத்த அழுத்தம் போன்ற நோய் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஈயம் இரத்தத்தில் உள்ளமையினால் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி மட்டம் குறைவடைவதாக உறுதியாகியுள்ளது.

உணவு மற்றும் குடிக்கும் நீரில் ஈயம் உள்ளமையினால் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளமை உறுதியாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.அனுராதபுரம் மாவட்டத்தின் கிராமிய பகுதிகள் சிலவற்றில் தெரிவு செய்யப்பட்ட சிலரிடம் மேற்கொள்ள பரிசோதனையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.