இலங்கையின் பிரபல நடிகருக்கு விழுந்த கோடிக்கணக்கான பணப்பரிசு! விசாரணையில் அம்பலமான உண்மை..!!

இலங்கையின் பிரபல திரைப்பட நடிகராக W.ஜயசிறி என்பவருக்கு லொத்தர் சீட்டிழுப்பில் 85000 அமெரிக்க டொலர் பணப்பரிசு கிடைத்துள்ளதாக கூறி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

85000 அமெரிக்க டொலர் பணப்பரிசு கிடைத்துள்ளதாக கூறி அவரது 12 லட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடியான முறையில் ஏமாற்றிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை ஹிரண பிரதேசத்தை சேர்ந்த நடிகரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டிற்கமைய விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.ICC நிறுவனத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட உலக கிண்ண போட்டிக்காக இந்த லொத்தர் சீட்டிழுப்பில் மேற்கொள்ளப்பட்டதாக கூறி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.