வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து வாங்க முயற்சி.. அதிரடியாக கைது செய்த பொலிஸார்..!!

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற குற்றச்சாட்டில் நேற்றிரவு பேருவளை பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நால்வர் கொண்ட குழு, 5000 ரூபா கொடுத்து வாக்காளர் அட்டைகளை பெற முயன்றுள்ளனர். இதன்போது இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தப்பியோடியுள்ளனர்.இதன்போது பொலிஸாரால் அவர்கள் பயன்படுத்திய காரொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.