தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதிக்கு அதிரடியாக இடமாற்றம்..!

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவாண் வணிகசூரியவுக்கு அதிரடியாக இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 8ம் திகதி இந்த இடமாற்றம் நடைமுறைக்குவரவுள்ளது. இவ்வாறு இடமாற்றமாகி செல்லும் மாவட்ட இராணுவத்தளதி தொண்டர் படையணியின் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார். மேலும் புதிய இராணுவ தளபதியாக தற்போது கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தளபதி செனரத் பண்டார நியமிக்கப்படவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரும், தேர்தல் நிறைவடைந்த பின்னர் 2 வாரங்களுக்குள் எந்தவொரு இடமாற்றத்திற்கும் தேர்தல் ஆணைக்குழு அனுமதி பெறப்படவேண்டும். இதன்படி ஆணைக்குழு அனுமதி பெற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாக தொியவருகின்றது.