மாமிச சந்தைகளை உடனடியாக மூடாவிட்டால் அடுத்த வைரஸ் உருவாகும் ஆபத்து..!! சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை…

உலகநாடுகள் மாமிச சந்தைகளை மூடவேண்டும் என சர்வதே அமைப்புகள் அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளன. சுகாதாரமற்ற இந்த வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கும் கடிதங்களை அனுப்பியுள்ளதாக விலங்குகளின் நண்பர்கள் என்ற அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.பீட்டா அமைப்பும் இதேபோன்றதொரு வேண்டுகோளை விடுத்துள்ளதுடன் பாம்பு இறைச்சிக்கு மேல் இலையான்கள் பறப்பதை காண்பிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

இரத்தத்தினால் நிரம்பியிருக்கும் மாமிச சந்தைகளில் நோய்வாய்ப்பட்ட விலங்குகள் காணப்படும் நிலைமை நீடிக்கின்ற பட்சத்தில் அடுத்த உலகளாவிய தொற்றுநோய் எந்த நேரத்திலும் உருவாகலாம் என பீட்டாவின் தலைவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.விலங்குகள் நெருக்கமாக வைக்கப்பட்டிருப்பதாலும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக அந்த இடத்திலேயே வெட்டப்படுவதாலும் அந்த சந்தைகள் புதிய வைரஸ்கள் உருவாகும் இடங்களாக மாறலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.சீனாவில் இவ்வாறான சந்தைகளை மீள திறப்பதை நிறுத்தவேண்டும் என அமெரிக்காவிற்கான சீனா தூதுவர் தனது நாட்டிற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளும் கடிதமொன்றினை அவருக்கு அனுப்பவுள்ளதாக செனெட்டர் லின்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.இந்தோனேசியா தாய்லாந்து உட்பட ஏனைய ஆசிய நாடுகளிற்கு தாங்கள் மாமிச சந்தைகளை மூடிவிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அதற்கான பதில் கிடைக்கவில்லை என பீட்டாவின் ஆசியாவிற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.விலங்குகளின் நண்பர்கள் அமைப்பு உலக சுகாதார ஸ்தாபனத்தின் நண்பர்களிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.மாமிச சந்தைகள் பல வருடங்களாக மில்லியன் கணக்கான வனவிலங்குகளை ஈவிரக்கமன்றி கொலை செய்துள்ளன என தெரிவித்துள்ள அந்த அமைப்பு இதன் காரணமாக முழு உலகிற்கும் அதன் சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.