கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் உருவாகப் போகும் இன்னுமொரு குட்டித் தீவு..!!

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடற்பரப்பில் மண்மேட்டை உருவாக்கி இன்னுமொரு துறைமுக நகரத்தை நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.துறைமுக நகரத்தின் பணிகளை இவ்வருடத்தின் இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி நீர் வழங்கள்.மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள துறைமுக நகரத்தின் பணிகளை துரிதப்படுத்தவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால், கொழும்பு தலைநகரில் புதிதாக ஒரு நிலப்பரப்பு தோற்றம் பெறும்.துறைமுக நகரம், மற்றும் புதிய துறைமுக நகரம் அபிவிருத்தி ஊடாக அதிக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளவத்தை தொடக்கம் பத்தரமுல்லை வரையிலான படகு ஊடான போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது