பழைய இரும்பிற்கு விற்பனை செய்யப்படவிருந்த பேரூந்து நடமாடும் நூல்நிலையமாக மாற்றம்..!!

இலங்கை போக்குவரத்துசபையினால் பழைய இரும்பிற்காக விற்பனை செய்யப்படவிருந்த இரட்டைத் தட்டு பேருந்து ஒன்று, மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரசாயக்க ஆரம்பப்பாடசாலையின் நடமாடும் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் பாடசாலைக்கு கடந்த மாதம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்போது, மாணவன் ஒருவர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த பேருந்து, பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.நடமாடும் பேருந்து நூலகத்தை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று மாணவர்களிடம் ஒப்படைத்தார்.