ஐ.தே.க.அலுவலகம் மீது கோரத் தாக்குதல்.!! இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..!!

கிருலப்பனையிலுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத குழுவொன்றினால் இன்று (திங்கட்கிழமை) காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐ.தே.க.வேட்பாளரான டைட்டஸ் பெரேராவின் அலுவலகமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அலுவலகத்தில் இருந்தவர்கள் மீதும் சந்தேகநபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் சம்பவத்தில் காயமடைந்துள்ள இருவர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த தாக்குதலில் அலுவலகம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.