மிக நீண்ட கால விண்வெளி ஆய்வை வெற்றிகரமாக முடித்து பூமியில் பத்திரமாக தரையிறங்கிய ஸ்பேஸ் எக்ஸ்..!!

முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூள்’ என்ற விண்வெளி ஓடம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.குறித்த விண்வெளி ஓடத்தில் பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக ஃபோலோரிடா வளைகுடா கடற்பகுதியில் உள்ள மெக்ஸிகோ வளைகுடாவின் கடல் பகுதியில் தரை இறங்கியுள்ளனர்.

இரண்டு மாத பயணம் மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோருக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு மாத விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.கடந்த 2011ஆம் ஆண்டில் நாசாவின் விண்வெளி விண்கலங்கள் ஓய்வு பெற்ற பின்னர் அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் முதல் சந்தர்ப்பம் இதுவாக அமைந்திருந்தது.அமெரிக்க விண்வெளி நிறுவனம் தனது ஒரு குழுவினரை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல ஒரு தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்திய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.இந்த வெற்றியின் மூலம், நாசா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கு ரஷ்யாவை சார்ந்திருப்பது முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று கருதப்படுகிறது