ஆபத்திலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற சுமந்திரனை அரசியல் அரங்கிலிருந்து தள்ளிவிடத் தயாராகும் விக்னேஸ்வரன்…!!

தமிழர்களைக் காப்பாற்ற என் மாணவனான சுமந்திரனை நான் நாடாளுமன்ற அரங்கிலிருந்து தள்ளிவிடப்போகின்றேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் பகிரங்க சவால் விடுத்துள்ளார். திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்துக்கு அருகில் இன்றிரவு நடைபெற்ற இறுதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.எனக்கு தள்ளாடும் வயதல்ல தள்ளிவிடும் வயது. சுமந்திரனை நான் நாடாளுமன்ற அரங்கிலிருந்து தள்ளிவிடப்போகின்றேன். அதற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது;