கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு பிறந்த குழந்தை..!! வெளியான மகிழ்ச்சி தரும் தகவல்..!

கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று தாய் ஒருவருக்கு பிறந்த குழந்தைக்கு வைரஸ் தொற்று கிடையாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாய்க்கு பிறந்த குறித்த சிசு PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் நேற்றைய தினம் அதன் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது.அதற்கிணங்க மேற்படி சிசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் கர்ப்பிணித் தாய் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் முறையில் அந்த குழந்தை பிறந்ததுடன் விசேட மருத்துவர்கள் 35 பேர் அந்த சத்திர சிகிச்சையில் ஈடுபட்டனர்.

அந்தக் குழந்தைக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.துபாயிலிருந்து நாடு திரும்பியுள்ள மேற்படி கர்ப்பிணித்தாய் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை மூலம் அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டது.அதையடுத்து மருத்துவர்களின் விசேட கண்காணிப்பின் கீழ்மேற்படி பெண் கடந்த 23ம் திகதி கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 24ஆம் திகதி குழந்தையை பிரசவித்துள்ளார்.தாயின் தொற்று பிள்ளைக்கு பரவாமல் தடுப்பது தொடர்பில் மருத்துவர்கள் மிகக் கவனமாக சிசேரியன் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.