சுயாதீன கருத்து கணிப்பில் யாழ்.தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளர்களில் திருமதி பவதாரணி முன்னிலை..!

யாழ்.மாவட்டத்தில் புத்திஜீவிகள், மற்றும் சாதாரண மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் பவதாரணி முன்னிலை பெற்றிருக்கின்றது.இம்முறை இலங்கை பாராளுமன்ற தேர்தல் களத்தில் அண்ணளவாக 7400வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 319பெண்வேட்பாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் இம்முறை 7 ஆசனங்களுக்காக 325பேர் போட்டியிடுகின்றனர் . இதில் சுமாராக 35பெண்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை இந்த தேர்தல்களம் யாழ்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்சியும் தமது கட்சியின் பெண்வேட்பாளரை முதன்மைப்படுத்தி நிற்பதாக உள்ளது. அது பலம் பலவீனம் என வேறுபட்ட அடிப்படையில் மக்களை அணுகுவதாக அமைந்துள்ளது.

இம்முறை பெண்வேட்பாளர்கள் பலர் புதிதாக களமிறங்கியுள்ளனர். ஆண் வேட்பாளர்களுக்கு சற்றும் தளராமல் போட்டியிடுகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பவதாரணி ராஜசிங்கம், ஜக்கிய மக்கள் சக்தியின் உமா சந்திரபிரகாஷ், தமிழரசு கட்சியின் சசிகலா ரவிராஜ் , விடுதலைக் கூட்டணியில் வாசுகி சுதாகர் , ஞானகுணேஸ்வரி,

தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மீரா அருள்நேசன் இவ்வாறாக பல பெண் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அத்துடன சுயேட்சைக்குழுக்களிலும் பெண்வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

யாழ்மாவட்டத்தின் புத்திஜீவிகள் மற்றும் சாதாரண பொதுமக்களிடம் நிகழ்த்தப்பட்ட சுயாதீன கருத்துக்கணிப்பில் பெருமளவானவர்கள் கட்சிகளை தெரிவு செய்யும்போது அதிலுள்ள பெண்வேப்பாளர்களை பிரதானப்படுத்தி வாக்களித்தனர்.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பவதாரணி ராஜசிங்கம் மற்றும் தமிழரசு கட்சியின் சசிகலா ரவிராஜ் மற்றும் உமா சந்திரபிரகாஷ் ஆகியோர் பெருமளவில் முன்னிலை பெற்றிருந்தனர்.

இம்முறை பாராளுமன்றத்திற்கு பெண்வேட்பாளர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் எனும் தொனிப்பொருளில் ஆங்காங்கே பல கூட்டங்கள் மற்றும் தெரு நாடகங்கள் இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அதன் அடிப்படையிலும் காரசாரமான அரசியல் பேச்சுக்களைத் தாண்டி மக்களோடு மக்களாக பயணிக்கும் மக்கள் குறைகளை முதன்மைப்படுத்தி அறிய முற்படுவதனாலும் பெண்வேட்பாளர்களின்

புதிய நேர் அணுகுமுறையினாலும் இம்முறை தேர்தல் களத்தில் பெண்வேட்பாளர்கள் வெற்றுபெறுவதற்கான வாய்ப்புக்கள் பெருமளவில் இருப்பதாக கருத்துக்கணிபுக்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன் ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தொடர்பில் மக்களிடம் எழுந்துள்ள விரக்திமனப்பாங்கு இம்முறை பாராளுமன்றத்திற்கான புதிய தேர்வுகளை நோக்கி மக்களை நகர்த்தியுள்ளமையை அறியமுடிகின்றது.

இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பம்படும் பெண்களின் விகிதாசாரம் மேம்படுவதுடன் தேர்வுகளும் மாறுபட்டு அமையும் என இக் கருத்துக்கணிப்பின் மூலம் அறிய முடிகிறது.

மேலும் திருமதி பவதாரணி தொடர்பில் கனடாவினை மையமாக கொண்டு இயங்கும் The Srilanka Reporter பத்திரிகையில் வெளியான கட்டுரை தொகுப்பு