சிறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 கைதிகள் தப்பியோட்டம்!

களுத்துறை சிறைச்சாலையின் மூன்று கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகள் மூன்று பேர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக களுத்துறை சிறைச்சாலையின் தனி இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தப்பிச் சென்ற கைதி ஒருவர் களுத்துறை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.மற்றைய இரு கைதிகளையும் தேடி களுத்துறை வடக்கு பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து கூட்டு செயற்பாடு ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.